Posts

Showing posts from January, 2018

நாத்திகம் என்பது தவறான சொல் அல்ல!

நாத்திகம் என்ற சொல் ஒன்றும் தவறானதல்ல . கடவுள் மறுப்பாளர்களை நாத்திகர்கள் என்று சொல்லுவது சரிதான் . மதுரைத் தமிழ்ப் பேரகராதி கூட நாத்திகம் என்ற சொல்லுக்கு தெய்வமின்மை நிரீஸ்வரம் என்றே பொருள் கூறுகிறது . பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் ( பக்கம் 626) என்ன கூறுகிறது ? நாத்திகம் (Atheism): தெய்வம் அல்லது தெய்வ நம்பிக்கை போன்ற பொருண்மை சாராதவற்றைத் திறனாய்தல் . கடவுள் உள்ளாரா என்று வினா எழுப்பி சடப்பொருட்களில் மட்டும் நம்பிக்கை கொள்ளும் உலகாயதம் போலல்லாமல் நாத்திகம் கடவுளை முற்றிலும் மறுக்கிறது . பல தத்துவ முறைகளில் இது வேரூன்றியுள்ளது . பண்டைய கிரேக்க தத்துவ ஞானிகளான டெமாகிரிட்டஸ் , எபிக்யுரஸ் ஆகியோர் பொருண்மைத்துவம் குறித்துப் பேசுகையில் இதை ஆதரித்து வாதிட்டுள்ளார் . 18 ஆம் நூற்றாண்டில் டேவிட் ஹ்யூம் , இம்மானுவல் கான்ட் ஆகியோர் நாத்திகவாதிகளல்லர் எனினும் , கடவுள் இருப்பதற்கான மரபு வழிச்சான்றுகளுக்கு எதிராக வாதிட்டனர் . கடவுட்பற்றே நம்பிக்கைக்குக் காரணம் என்றனர் . லுட்விக் ஃபாயர்பாக் போன்ற நாத்திகவாதிகள்